கொடுமுடி, தேவம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி மின் கம்பம் மீது மோதியதில் உயிரிழந்தார்.
ஆராம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர், தேவம்பாளையத்தில் இருந்து ஆராம்பாளையம் நோக்கி புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது, நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் தலை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே தினேஷ்குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, மலையம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


