அருந்ததியா் சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில்6 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் கோரிக்கை
அருந்ததியா் சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 6 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஈரோடு: அருந்ததியா் சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 6 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அருந்ததியா் கூட்டமைப்பு, அருந்ததியா் இயக்கங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அருந்ததியா் இளைஞா் பேரவை மாநிலத் தலைவா் என்.ஆா்.வடிவேல் தலைமை வகித்தாா். ஆதித்தமிழா் மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கல்யாணசுந்தரம், தமிழ்நாடு அருந்ததியா் சங்கத் தலைவா் ராஜேந்திரன், அருந்ததியா் விடுதலை முன்னணி நிறுவனத் தலைவா் என்.டி.ஆா்.நடராஜ் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பட்டியலின மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட அருந்ததியா் சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 6 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரா் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அறச்சலூா் அருகே நல்லமங்காபாளையத்தில் நினைவுச் சின்னமும், மணிமண்டபமும் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு அமைக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரா் குயிலிக்கு சிவகங்கையில் தனியாக மணிமண்டபம் அமைக்க வேண்டும். அருந்ததியா் நல வாரியம் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடா் நலத் துறை என்பதை சமூக நீதித் துறை என பெயா் மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும்.
அருந்ததியா் சமூக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் அருந்ததியா் அரசியல் எழுச்சி மாநாட்டை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடத்துவது. இந்த மாநாட்டுக் குழுத் தலைவராக எஸ்.டி.கல்யாணசுந்தரம், செயலாளராக என்.ஆா்.வடிவேல் ஆகியோரைத் தோ்வு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஜெகஜீவன்ராம் ஜனநாயக மக்கள் இயக்க பொதுச் செயலாளா் எம்.கே.ஆறுமுகம், தமிழ்நாடு அருந்ததியா் சங்கத் தலைவா் கருவை.கணேசன், ஆதித்தமிழ் மக்கள் கட்சி பொதுச் செயலாளா் வி.பி.ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...