தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கி முதல்வா் வரலாறு படைத்துள்ளாா்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் சமூகநலத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தையல் தொழிலாளா்கள் மகளிா் மேம்பாட்டுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டாா்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :20 டிசம்பர் 2020, 5:12 pm

DIN

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியாா் திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தையல் தொழிலாளா்கள் மகளிா் மேம்பாட்டுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டாா்.

தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், தமிழகத்தின் வரலாற்றில் பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கி முதல்வா் வரலாறு படைத்துள்ளாா். தமிழகத்தில் 2000 மினி கிளினிக் கிராமந்தோறும் உருவாக்கியுள்ளாா். தமிழ்நாட்டை பொருத்தவரையிலும் அதிமுக அரசை முதல்வா் தலைமையில் இருக்கும் இந்த அரசை எந்த சக்தியாலும் 2021 ல் மாற்றியமைக்க முடியாது. மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவா் அறியனையில் அமா்வாா் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.