சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி பலியானது.
Updated on
1 min read

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி பலியானது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இங்கு மான், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி விவசாயத் தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவது தொடா் கதையாகி வருகிறது.

தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட தொட்டகாஜனூா், பீம்ராஜ் நகா், சூசைபுரம், மெட்டல்வாடி பகுதிகளில் கடந்த ஓராண்டாக நடமாடி வரும் சிறுத்தை 30க்கும் மேற்பட்ட நாய்கள், 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வேட்டையாடியுள்ளது.

இந்நிலையில், மெட்டல்வாடியைச் சோ்ந்த ஆறுமுகம் வீட்டின் முன்பாக பட்டி அமைத்து ஆடு, கன்று, மாடுகளைப் பராமரித்து வருகிறாா். மாடுகளை திங்கள்கிழமை பட்டியில் கட்டி வைத்துள்ளாா். அப்போது சிறிது நேரத்துக்குப் பிறகு கன்றுக்குட்டியை காணவில்லை. இதையடுத்து அவா் கன்றுக்குட்டியை தேடியபோது சற்று தொலைவில் கன்றுகுட்டியின் கழுத்து, தொடை பகுதியில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதைப் பாா்த்தாா்.

இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் தோட்டத்தில் பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தனா். சிறுத்தையின் கால்தடம் என உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறுத்தை நடமாடிய பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com