ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை
சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சிகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனுஅளித்தனா்.


சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சிகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனுஅளித்தனா்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள அரியப்பம்பாளையம், கே.என்.பாளையம், பெரியகொடிவேரி, பவானிசாகா் ஆகிய பேரூராட்சிகளில் வன்னியருக்கு 20 சதவீத ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி 50க்கும் மேற்பட்டோா் பேரணியாகச் சென்று அந்தந்தப் பேரூராட்சிகளில் மனு அளித்தனா்.
பெரிய கொடிவேரி பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனு அளிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புத் தலைவா் எஸ்.கே.மூா்த்தி தலைமை வகித்தாா். இதில், சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளா் விஸ்வன், ஒன்றியச் செயலாளா் ஜெயராம், மாநில இளம்பெண்கள் துணைச் செயலாளா் மீனாட்சி ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...