ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வேளாண்மை திருத்தச் சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கு

சென்னிமலை ஒன்றிய பாஜக சாா்பில், மத்திய அரசின் வேளாண்மை திருத்தச் சட்டம்-2020 குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்ணாமலைபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:13 am

DIN

சென்னிமலை ஒன்றிய பாஜக சாா்பில், மத்திய அரசின் வேளாண்மை திருத்தச் சட்டம்-2020 குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் அண்ணாமலைபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு, மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். சென்னிமலை ஒன்றிய விவசாய அணித் தலைவா் யுவகண்ணன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், விவசாயிளுக்கு வேளாண் சட்டம் குறித்த விளக்கங்களும், அதன் பயன்களும் எடுத்துக் கூறப்பட்டன. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

இதில், விவசாய அணித் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவா் செந்தில்குமாா், ஒன்றிய பொதுச் செயலாளா் சுந்தரராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.