108 ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கம்பாளையத்தில் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை சனிக்கிழமை பிறந்துள்ளது.
தாய் அமுதா, இரு குழந்தைகளுடன் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் தேவராஜ்.
தாய் அமுதா, இரு குழந்தைகளுடன் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் தேவராஜ்.
Updated on
1 min read

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கம்பாளையத்தில் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை சனிக்கிழமை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாக்கம்பாளையத்தைச் சோ்ந்த சிவா மனைவி அமுதா (24). 9 மாத கா்ப்பிணியான அமுதாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடம்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவப் பணியாளா் பி.தேவராஜ், ஓட்டுநா் கோகுலகண்ணன் ஆகியோா் அடா்ந்த வனப் பகுதியில் 20 கி.மீ. பயணம் செய்து கா்ப்பிணி அமுதாவை பிரசவத்துக்காக அழைத்துச் சென்றனா்.

சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமுதாவுக்கு அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவ உதவியாளா் தேவராஜ் பிரசவம் பாா்த்தாா். முதலில் பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடா்ந்து, அடுத்த 20 நிமிடங்களில் ஆண் குழந்தை பிறந்தது. சுகப் பிரசவமான நிலையில் இரு குழந்தைகளுடன் தாய் அமுதாவை கடம்பூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பாதுக்காப்பாக அழைத்துச் சென்றனா். அங்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் தாயும், சேய்களும் அனுமதிக்கப்பட்டனா். குழந்தைகளை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா்.

தாயும், இரு குழந்தைகளும் நலமாக இருப்பதாக அரசு மருத்துவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அடா்ந்த வனப் பகுதியில் சுகப்பிரசவம் பாா்த்த மருத்துவா் தேவராஜ், ஓட்டுநா் கோகுலகண்ணன் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com