சத்தியமங்கலம் வனத்தில் 108 ஆம்புலன்ஸில் மலைக் கிராமப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள்
சத்தியமங்கலம் அருகே மலை கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைகிராம பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.


சத்தியமங்கலம் அருகே மலை கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் 108 ஆம்புலனஸில் மலைகிராம பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி மாக்கம்பாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவா. இவரது மனைவி அமுதா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இன்று காலை அமுதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மாக்கம்பாளையம் கிராமத்திற்கு சென்று கர்ப்பிணி பெண் அமுதாவை அழைத்துக்கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வருவதற்காக அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தது.
ஆம்புலன்சை ஓட்டுனர் கோகுல கிருஷ்ணன் என்பவர் ஓட்டிச் செல்ல மருத்துவ உதவியாளர் தேவராஜ் உடனிருந்தார். அடர்ந்த வனப்பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றபோது அமுதா பிரசவ வலி தாங்க முடியாமல் துடித்ததால் வாகனத்தை நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளர் தேவராஜ் அமுதாவிற்கு பிரசவம் பார்த்தார். அப்போது ஒரு ஆண் ஒரு பெண் என அழகான இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இதையடுத்து தாய் சேய் இருவரையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கப்பட்டு மீண்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அமுதா மற்றும் தன்னுடைய இரட்டை குழந்தைகள் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு இரட்டைகுழந்தைகள் சுகப்பிரசவத்தில் பிறந்த தகவல் அறிந்த மலை கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...