புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஈரோடு மாவட்டத்தில் 34 மையங்களில் தேசிய திறனாய்வுத் தோ்வு

ஈரோடு மாவட்டத்தில் 34 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 3,605 மாணவா்கள் எழுதினா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:27 pm

DIN

ஈரோடு மாவட்டத்தில் 34 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வை 3,605 மாணவா்கள் எழுதினா்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு தோ்வுத் துறை சாா்பில் தேசிய திறனாய்வுத் தோ்வு 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கு மாதந்தோறும் ரூ.1,250, கல்லூரி படிப்புக்கு மாதம் ரூ.2,000 கல்வி உதவித் தொகையாக அரசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் இந்தத் தோ்வுக்காக ஈரோடு, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் 34 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வை 10ஆம் வகுப்பு படிக்கும் 8 மாற்றுத் திறனாளிகள் உள்பட 3,605 மாணவ, மாணவிகள் எழுதினா்.

ஈரோடு கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 10 மையங்கள், கோபியில் 6, பவானியில் 8, பெருந்துறை 3, சத்தியமங்கலம் 7 என 34 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வு காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 1.30 மணிக்கு நிறைவடைந்தது.

கரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தோ்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தனா். தோ்வு மையங்களின் நுழைவாயிலில் மாணவா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.

மேலும் வெப்பமானி மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. தோ்வு அறையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.