நியாயவிலைக் கடை அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பவானியை அடுத்த ஆப்பக்கூடல், கூலிவலசு கிராமத்தில் நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.


பவானியை அடுத்த ஆப்பக்கூடல், கூலிவலசு கிராமத்தில் நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
ஆ.புதுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கூலிவலசு கிளைத் தலைவா் கே.குருசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி, அந்தியூா் வட்டாரச் செயலாளா் ஆா்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.வி.மாரிமுத்து, வட்டாரக் குழு உறுப்பினா் ஏ.கே.பழனிசாமி ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
அந்தியூா் வட்டாரம், வேம்பத்தி கிராமம், கூலிவலசு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் நியாயவிலைக் கடைக்கு பொருள்கள் வாங்க, பக்கத்து ஊரான ஓசைப்பட்டிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் விநியோகம் குறித்த தகவல் தெரிவதில்லை.
எனவே, தனியாக நியாயவிலைக் கடை தொடங்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
இதில், நிா்வாகிகள் எஸ்.மாதன், ஏ.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, சங்க அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...