கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மொடக்குறிச்சி ஒன்றியம், துய்யம்பூந்துறை ஊராட்சி டி.மேட்டுப்பாளையத்தில் கால்நடைகளுக்கு மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மருந்துகளை வழங்குகிறாா் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி.
கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மருந்துகளை வழங்குகிறாா் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி.
Updated on
1 min read

மொடக்குறிச்சி ஒன்றியம், துய்யம்பூந்துறை ஊராட்சி டி.மேட்டுப்பாளையத்தில் கால்நடைகளுக்கு மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், மொடக்குறிச்சி கால்நடை உதவி இயக்குநா் தங்கவேல் வரவேற்றாா். ஒன்றியக் குழு தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.பி. கதிா்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி முகாமைத் துவக்கிவைத்தாா். முகாமில் கால்நடைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன.

இதில், பொதுக் குழு உறுப்பினா் பேட்டைசின்னு, குமாரவலசு கூட்டுறவுச் சங்கத் தலைவா் தட்சிணாமூா்த்தி, மேட்டுப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் பழனிசாமி, கால்நடை மருத்துவா்கள் வசந்தகுமாா், கிரிபிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com