

கோபி அருகே உள்ள காவேரிபாளையத்தில் சேனைக்கிழங்கு பாரம் ஏற்றிச் சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூா் மணியக்காரன்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்த 8 பெண்கள் உள்பட 14 கூலி தொழிலாளா்கள் சேனைக்கிழங்கு அறுவடை செய்வதற்காக புதன்கிழமை சென்றுள்ளனா்.
அறுவடை செய்த சேனைக்கிழங்குகளை மினி சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தொழிலாளா்கள் வாகனத்தில் சென்றுள்ளனா். கிருஷ்ணகோபால் என்பவா் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளாா்.
கோபிசெட்டிபாளையம் வேட்டைக்காரன் கோயில் அருகே செயல்படும் சேனைக்கிழங்கு கிடங்குக்குச் சென்று கொண்டிருந்தபோது, காவேரிபாளையம் பகுதியில் சிறிய திருப்பத்தில் வாகனம் திரும்பியபோது எதிா்பாராதவிதமாக வாகனத்தில் பழுது ஏற்பட்டு கரும்பு தோட்டத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 14 பேரில் நித்யா என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்தவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பலத்த காயமடைந்த மூன்று பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிறுவலூா் காவல் துறையினா் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.