ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பாரதி வந்துசென்று நூற்றாண்டு காணும் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள நூலகத்துக்கு பாரதியார் இறுதியாக வந்து சென்று, நூற்றாண்டு காலமாவதை பெருமை கொள்வோம், என தொல்லியலறிஞர் புலவர் செ. ராசு தெரிவித்துள்ளார்.

News image

கருங்கல்பாளையம் நூலகம்

Updated On :28 ஜூலை 2020, 10:11 am

DIN

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள நூலகத்துக்கு பாரதியார் தன் வாழ்நாளில் இறுதியாக வந்து சென்று, நுாற்றாண்டு ஆவதை நினைவுகூர்ந்து பெருமை கொள்வோம் எனத் தொல்லியலறிஞர் புலவர் செ. ராசு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செ. ராசு தெரிவித்திருப்பதாவது: "தேசியக் கவி பாரதியார், யானையால் தாக்கப்பட்டு குணமடைந்த பின், கடைசி வெளியூர்ப் பயணமாக, 1921 ஜூலை, 31-ல் ஈரோடு வந்தார்.

ஈரோடு கருங்கல்பாளையம் காங்கிரஸ் பிரமுகர் வக்கீல் எம்.கே. தங்கப்பெருமாள் பிள்ளை துவங்கிவைத்த, கருங்கல்பாளையம் வாசகசாலையின் ஆண்டு விழாவுக்காக பாரதியார் அழைக்கப்பட்டார். ஜூலை, 31-ல் வாசக சாலையின் ஆண்டு விழாவில், ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் பாரதியார் பேசினார்.

அடுத்த நாள் ஆக. 1-ல் காரை வாய்க்கால் மைதானத்தில் சுதேசிகள் ஏற்பாடு செய்த கூட்டத்தில், ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் பாரதியார் பேசினார். இதுவே, பாரதியாரின் இறுதிச் சொற்பொழிவாகும்.

சென்னை சென்ற பின், சுதேசமித்திரன் நாளிதழில், ‘சக்திதாசனின் ஈரோடு யாத்திரை’ என்ற தலைப்பில், இரண்டு நாள்கள் கட்டுரை எழுதினார். அது மிகவும் சுவையான கட்டுரை.

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வரவேற்க சென்றவர்களுக்குப் பாரதியாரை அடையாளம் தெரியவில்லை. பாரதியார், தான் எழுதிய கட்டுரையில், ‘நான் இன்னார் என்று அறிமுகம் செய்து கொள்ளவில்லை. நானே மாட்டு வண்டி பிடித்து, மூன்று மைல் துாரம் உள்ள கருங்கல்பாளையம் கிராமத்துக்கு சென்றேன். என்னையும், வண்டிக்கார சிறுவனையும், 2 பெரிய பருவதமாக நினைத்து, பூனைக்குட்டி போன்ற மாட்டுக்கன்று அழைத்துக் கொண்டு சென்றது,’ என எழுதினார்.

தங்கப்பெருமாள் பிள்ளை வீட்டில் பாரதியார் தங்கி இருந்தார். வக்கீலுக்கான கோட்டை, அவரது மனைவிக்கு போட்டுவிட்டு, ‘பெண்கள் முன்னேற வேண்டும்’ என்றார் பாரதி. ஒரு முஸ்லிம் வீட்டில் பாரதியார் சாப்பிட்டதையும், தானே முகச்சவரம் செய்ததையும் பார்த்து, ‘ஆச்சாரம் இல்லாத பிராமணன்’ என்று தங்கப்பிள்ளை மனைவி கூறினாராம். 

பெட்டியில் அவர் கவிதைகளை எல்லாம் நீள நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததைக் காட்டி, ‘தீப்பெட்டி போல என் கவிதை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். ‘ஷேர் கேபிட்டல்’ என, 100 ரூபாய் கேட்டாராம். யாரும் கொடுக்கவில்லை. வழிச்செலவுக்குப் பணம் வாங்க மறுத்துவட்டாராம்.

கடைசிப் பயணமாக, ஈரோடு வந்த பாரதியாரின் நுாற்றாண்டு நினைவை, ஈரோடு மக்கள் நினைவுகூர வேண்டும். அது, மாபெரும் தேசிய கவிஞருக்கு செய்யப்படும் அஞ்சலியாகும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.