அந்தியூரில் திமுக, கம்யூ. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் போராட்டம் 

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில்  வளர்ச்சிப் பணிகளுக்கு பாரபட்சமின்றி நிதி ஒதுக்க வலியுறுத்தி திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள்
அந்தியூரில் திமுக, கம்யூ. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் போராட்டம் 

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில்  வளர்ச்சிப் பணிகளுக்கு பாரபட்சமின்றி நிதி ஒதுக்க வலியுறுத்தி திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியக் குழுவில்  மொத்தமுள்ள 16 ஒன்றிய குழு உறுப்பினர்களில் அதிமுக 7 பேரும், பாமக 2, திமுக 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர். அந்தியூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிதியில், பணிகள் தேர்வு மற்றும் நிதி ஒதுக்குவதற்கான சிறப்பு கூட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்அதிமுகவைச் சேர்ந்த  தலைவர் வளர்மதி தேவராஜ் தலைமையில் நடைபெற்றது.

வளர்ச்சிப் பணிகளுக்கு அதிமுக, பாமகவுக்கு அதிகமாகவும், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் வார்டுகளுக்கு மிகக் குறைந்த அளவிலும் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து வார்டுகளுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கூட்டத்தில் திமுக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

 இதனால், ஏமாற்றம் அடைந்த திமுக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக, திமுக என பாகுபாடு காட்டாமல் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பர்கூர் மலைப் பகுதியில் மொத்தமுள்ள 3 வார்டுகளில் அதிமுக ஒரு வார்டிலும், திமுக 2 வார்டிலும் வெற்றி பெற்றது. 

தற்போது அதிமுக வார்டுக்கு ரூ.10 லட்சம் நிதியும், திமுக வெற்றி பெற்ற 2 வார்டுகளுக்கு சேர்ந்து தலா ரூ. 3 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் நிதி ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம். 

எனவே, அனைத்து வார்டுகளுக்கும் சமமான முறையில் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com