ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

News image
Updated On :20 ஜூன் 2020, 2:26 pm

DIN

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் சித்தன் குட்டை நீர்த்தேக்க பகுதியில் அன்னூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பிரனேஷ், யஸ்விந்த், கதிரேசன், ரகுராம் மற்றும் சுரேஷ்ராஜா ஆகிய ஐந்து மாணவர்கள் குளிப்பதற்கு சென்றுள்ளனர். இவர்கள் நீரில் குளித்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக பிரனேஷ் என்ற மாணவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். 

இதைக்கண்ட யஷ்விந்த், கதிரேசன், ரகுராம் ஆகிய மூவரும் காப்பாற்ற சென்றபோது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி நான்கு பேரும் உயிரிழந்தனர். இதில் சுரேஷ்ராஜா உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.

Story image

மேலும் இதுகுறித்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.