ஈரோட்டில் தி.மு.க சார்பில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
By DIN | Published On : 21st July 2020 02:58 PM | Last Updated : 21st July 2020 02:58 PM | அ+அ அ- |

ஈரோட்டில் தி.மு.க. தெற்கு மாவட்ட சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. அரசின் கடுமையான மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஈரோடு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் பெரியார்நகர் இல்லம் முன் சமூக இடைவெளி விட்டு கருப்புக்கொடி ஏற்றி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பட்டத்திற்கு மாநகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.பிகந்தசாமி, முன்னாள் வில்லரசம்பட்டி ஊராட்சித்தலைவர் முருகேஷ்சன், மாவட்ட பொருளாளர் பி,கே,பழனிசாமி உள்பட ஏரளாமனோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்திலும், மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.