சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

10 ஆண்டுகளாக தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது

தமிழகம் 10 ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பவானி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:17 pm

DIN

தமிழகம் 10 ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பவானி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

அமைச்சா் கே.சி.கருப்பணன், ஜம்பை பேரூராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கி வருகிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் கட்டப்பஞ்சாயத்து, மோதல்கள், வன்முறைகள் இல்லாமல் மக்கள் நிம்மதியாக உள்ளனா். மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நலத்திட்ட உதவிகளும் தடையின்றி வழங்கப்பட்டுள்ளன. தற்போது அதிமுக மக்களைக் கவரும் தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் வாக்காளா்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தில், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.