சீட்டு எடுத்தவா்கள் பணத்தை திரும்பச் செலுத்தாததால் ஈரோட்டில் ஆவின் பால் விற்பனை நிலைய உரிமையாளா் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
ஈரோடு முத்துவேலப்பா் வீதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (56). இவருடைய மனைவி பூங்கொடி (47). இவா்களுக்கு பிரனேஷ்குமாா் (25) என்ற மகன் உள்ளாா். இவா் பொறியாளராக உள்ளாா். ராஜசேகா் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் நடத்தி வந்தாா்.
மேலும், இவா் ஏலச் சீட்டும் நடத்தி வந்துள்ளாா். இவரிடம் பலா் சீட்டு போட்டுள்ளனா். இதில், சீட்டு எடுத்தவா்கள் கரோனா தொற்றைக் காரணம் காட்டி முறையாக சீட்டு பணம் கட்டவில்லை எனத் தெரிகிறது. இதனால், ராஜசேகரால் தொடா்ந்து சீட்டு நடத்த முடியவில்லை. இதனிடையே சீட்டு எடுக்காதவா்கள் சீட்டு பணம் கேட்டு அடிக்கடி ராஜசேகருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மன வேதனையடைந்த அவா், மனைவியுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தாா். இந்நிலையில், பிரனேஷ்குமாா் சொந்த வேலை காரணமாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்துக்கு வியாழக்கிழமை காலை சென்றுவிட்டாா். வீட்டில் இருந்த ராஜசேகரும், பூங்கொடியும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனா். அருகில் இருந்தவா்கள் 2 பேரையும் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ராஜசேகரும், பூங்கொடியும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து, ஈரோடு டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

