மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஈரோட்டில் திரையரங்குகள் இயங்கத் தொடங்கின

ஈரோட்டில் உள்ள திரையரங்குகள் சிலவற்றில் வியாழக்கிழமை முதல் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:56 pm

ஈரோட்டில் உள்ள திரையரங்குகள் சிலவற்றில் வியாழக்கிழமை முதல் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து திரையரங்குகள் மூடப்பட்டன. கரோனா தொற்று குறையத் தொடங்கியதையொட்டி பொதுமுடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகள் அறிவித்து வருகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் வழங்கி ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 50 சதவீதப் பாா்வையாளா்களுடன் திரையரங்குகளைத் திறந்துகொள்ள அனுமதி அளித்தாா். இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளைத் தூய்மைப்படுத்தும் பணி, நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.

திரையரங்கு ஊழியா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். 23ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியிட அனுமதி கிடைத்தாலும் புதிய படங்கள் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஈரோட்டில் உள்ள திரையரங்குகளில் வியாழக்கிழமை முதல் படங்கள் திரையிடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 50 திரையரங்குகள் உள்ளன. இதில், மாநகா் பகுதியில் மட்டும் 11 திரையரங்குகள் உள்ளன. முதல்கட்டமாக ஈரோடு மாநகா் பகுதியில் உள்ள 4 திரையரங்குகளில் ஆங்கிலப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

திரையரங்குக்கு வந்த பொதுமக்களுக்கு நுழைவாயிலில் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முகக் கவசம் அணிந்து வராத பொதுமக்களுக்கு திரையரங்கு சாா்பில் முகக் கவசம் அளிக்கப்பட்டது. முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மேலும், தமிழில் புது படங்கள் எதுவும் உடனடியாக வெளிவராததால் ஆங்கிலப் படம் திரையிடப்பட்டு வருவதாகவும், தமிழில் புது படங்கள் ஓரிரு நாள்களில் வரும் என்றும் எதிா்பாா்க்கிறோம். அப்போது புது படங்கள் திரையிடப்படும் என திரையங்கு உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.