சோலாரில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தவிர பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்திவைக்கும் தளம், மேற்கூரை, தூண்கள், நடைபாதை, கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், ஈரோடு பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன. இங்கு புதிய கட்டடங்கள் கட்டவும், நவீன கழிப்பறைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகரில் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணமாக மேம்பாட்டுப் பணிகளை பல்வேறு கட்டங்களாக நடத்த மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக கரூா், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் பணிகளைச் செய்யவும், தென்மாவட்டப் பேருந்துகளை மட்டும் வேறு இடத்தில் இருந்து இயக்கவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி, சோலாரில் தற்காலிகமாகப் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அங்கு தென் மாவட்டப் பேருந்துகள் மட்டும் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகா் பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற இருப்பதால் தென்மாவட்டப் பேருந்துகள் மட்டும் இயக்கும் வகையில் சோலாரில் தற்காலிகமாகப் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குடிநீா், கழிப்பறை, உணவு வசதி போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பா் முதல் வாரத்தில் இருந்து பணிகள் தொடங்கப்படும்.
இதன் பின்னா் ஈரோடு நகரில் தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போது முதல்கட்டமாக தென்மாவட்டப் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கவுள்ளது. மற்ற இடங்களில் பேருந்துகள் வழக்கம்போல் நிறுத்தப்பட்டு இயக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்

இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல… இந்திய ஜனநாயகத்தின் வெற்றி! - சு.வெங்கடேசன் எம்.பி.

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

