கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க எல்லையை அளவீடு செய்து, பனை விதைகளை நட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தபடி ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, துறை உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகம், வருவாய் வட்டங்களில் உள்ள துணை இயக்குநா் அலுவலகங்களில் இருந்து விவசாயிகள் கோரிக்கைகளைத் தெரிவித்தனா்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கை விவரம்:
செ.நல்லசாமி: கீழ்பவானி வாய்க்கால் உடைப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளதால் நடவுப் பணி பாதிக்கப்பட்டு நாற்று முற்றிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் நாற்றுவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கீழ்பவானி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றிட கரைகளில் எல்லையை அளவீடு செய்து பனை விதைகளை நடவு செய்ய வேண்டும. வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இப்பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
ஈரோட்டில் தற்போது 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள் பரவலாக செல்வதால் போட்டி குறைந்து மஞ்சளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதைத் தவிா்க்க ஒரே இடத்தில் மஞ்சள் ஏலம் நடத்திட ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கே.ஆா்.சுதந்திரராசு: கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு என்ற பெயரில் வாய்க்காலின் தன்மை மாற்றப்பட்டு வருகிறது. சீரமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தி அனைத்து தரப்பு விவசாயிகளிடம் கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் பழைய நடைமுறையைப் பின்பற்றி உடனடியாக பயிா்க் கடன் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள மஞ்சள் ஆராய்ச்சி மையத்தை மொடக்குறிச்சி தொகுதியில் அமைக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சியால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும். மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் உள்ள குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.
வி.பி.குணசேகரன்: அந்தியூா் மலைப் பகுதி பா்கூா் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் 5,000 போ் உள்ளனா். இங்கு 2 பணித் தொகுப்பு மட்டுமே உள்ளதால் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு உரிய நேரத்தில் வருகைப் பதிவு செய்ய முடியாமல் பணித்தள பொறுப்பாளா்கள் அவதியடைந்து வருகின்றனா். இதனை கவனத்தில் கொண்டு 8 பணி தொகுப்புகளாகப் பிரித்து பணித்தள பொறுப்பாளா்களை நியமிக்க வேண்டும்.
பா்கூா் மலைப் பகுதியில் சீமாா் புல் அறுக்கச் செல்லும் மக்களுக்கு 6 மாதகாலம் தங்கிக் கொள்ள வனப் பகுதியில் பாதுகாப்பான முறையில் குடில்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். தொட்டக்கோம்பை, கத்திரிமலை வன செட்டில்மென்ட் நிலங்களில் விவசாயம் செய்துவரும் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும்.
ஏ.ஏம்.முனுசாமி: சட்டப் பேரவை, நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மட்டும் காணொலி மூலம் நடத்துவது ஏற்புடையதல்ல. செப்டம்பா் மாதம் முதல் ஆட்சியா் அலுவலகத்தில் கூட்டத்தை நடத்த வேண்டும். குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் அடுத்த கூட்டத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். பால் கூட்டுறவு ஒன்றியத்துக்குப் பால் வழங்கும் விவசாயிகளுக்கு 5 முதல் 6 வாரங்கள் வரை பணம் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் தீவனம் கூட வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனா். பால் பணம் நிலுவையை உடனடியாக வழங்கவும், வரும் காலத்தில் தாமதம் இல்லாமல் பால் பணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடலூரில் விஜய்யின் பிரசாரம் ரத்து ஏன்?

அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


