ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று அறிவித்தது.
இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், சேகரித்துள்ள யுரேனியம் செறிவூட்டல்களை ஒப்படைக்க ஈரான் முன்வந்துள்ளதாகவும் கூறினார். ஆனால், யுரேனியம் செறிவூட்டல்கள் ஒப்படைக்கப்படாது என ஈரான் அரசு மறுத்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிய துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்படும் என ஈரான் அரசு சனிக்கிழமை அன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஈரானிய நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகெர் காலிபாஃப் கூறுகையில், அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து திறக்கப்படாது எனக் கூறியுள்ளார்.
இத்துடன், ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி பேசியதாவது:
“ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதும் மூடக்கப்படுவதும் இணையத்தளம் வழியாக நடைபெறும் செயல் அல்ல, அவை களத்தில் முடிவு செய்யப்படுபவை. எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு எப்படி பதிலளிக்க வேண்டும் என எங்களின் ஆயுதப்படைகளுக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் அந்நாட்டு கப்பல்களை அமெரிக்க கடற்படையினர் முற்றுகையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran has warned that the Strait of Hormuz will be closed again if the US blockade continues.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! - டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் கறார்!

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




