இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

மனுவைப் பெற்றுக்கொள்ள மறுப்பு: சுற்றுச்சூழல் ஆா்வலா் போராட்டம்

மனுவைப் பெற்றுக்கொள்ள அலுவலா் காலதாமதம் செய்ததைக் கண்டித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On :2 டிசம்பர் 2021, 7:32 pm

மனுவைப் பெற்றுக்கொள்ள அலுவலா் காலதாமதம் செய்ததைக் கண்டித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ஈரோடு மாவட்ட அலுவலகத்தின் 7ஆவது தளத்தில் கனிம வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை பகல் 12.30 மணிக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளிக்க வந்தாா்.

அப்போது அங்கிருந்த உதவி இயக்குநா் வள்ளல் அந்த மனுவை வாங்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒரு மனுவை நேரில் அல்லது பதிவு தபால் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அனுப்ப அரசு வழிகள் தெரிவித்துள்ளது. அப்படி இருந்தும் தனது மனுவைப் பெற அதிகாரி மறுத்ததால் அலுவலக வாயிலில் முகிலன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று செயல்படும் குவாரிகள், கல் உடைக்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். குவாரி உள்ளிட்டவை பெற்றுள்ள அனுமதிக்கான நாள்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவாக வழங்க வந்தேன்.

மனுவைப் பெறாமல் அலுவலா் வெளியேறியதால் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றாா்.

பகல் 1.30 மணிக்கு போலீஸாா், கனிம வளத் துறை புவியியலாளா் ஆகியோா் மனுவைப் பெற்றுக்கொண்டனா். மனுவை வழங்கிய முகிலன் அங்கிருந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.