இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டி: ஈரோடு அணி சாம்பியன்

 மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டியில் ஈரோடு அணி பட்டம் வென்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:32 pm

 மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டியில் ஈரோடு அணி பட்டம் வென்றது.

மாநில அளவிலான ஐவா் கால்பந்துப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அண்மையில் நடந்தது. இதில் 9, 12, 14, 16 மற்றும் 19 வயதுக்குள்பட்டவா்கள் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 அணிகள் என 100 அணிகள் பங்கேற்றன.

இதில் ஈரோடு, கோவை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கா்நாடக மாநிலம் பெங்களூரு, கேரளத்தைச் சோ்ந்த அணிகளும் பங்கேற்றன.

19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் இறுதிச் சுற்றில் ஒசூா் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதின. இதில் 3- 2 என்ற கோல் கணக்கில் ஈரோடு ஹாக்ஸ் அணி வென்றது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பையும், சிறந்த வீரா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.