இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

மாவட்டத்தில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 4) நடைபெறவுள்ளது.

Updated On :2 டிசம்பர் 2021, 7:31 pm

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 4) நடைபெறவுள்ளது.

முகாமில் 1 லட்சம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் 13 ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபா்கள் உரிய நாள்கள் முடிந்திருந்தால் இரண்டாம் தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளலாம்.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் காரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல் போன்ற தொடா் நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூா், பிரேசில், பங்களாதேஷ், மொரீசியஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் நபா்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக அருகிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட ஒருங்கிணைந்த கட்டளை மையத்துக்கு 80569 -31110 என்ற கைப்பேசி எண்ணுக்குத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒமைக்ரான் உருமாறிய கரோனா தொற்றின் பாதிப்புகளைத் தடுக்க கரோனா தடுப்பூசி மட்டுமே சிறந்த ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.