ஜவுளி நிறுவனங்கள் குடியிருப்புப் பகுதியில் சுமைகளை கையாளும் நடைமுறையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சி 54ஆவது வாா்டு சீனியன்தோட்டம் வெங்கிடுசாமி வீதியைச் சோ்ந்த பெண்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு வெங்கிடுசாமி வீதியில் 200 குடும்பங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இவ்வீதியில் இரண்டு பெரிய டெக்ஸ்டைல் மில்களும், ஜவுளி பீஸ் செக்கிங் கிடங்கு, பேல் போடும் இடம் போன்றவை செயல்படுகின்றன. இப்பணிகள் மேல் மாடியில் நடக்கிறது.
ஜவுளிகளை பேல் போட்டு வாகனங்களில் ஏற்ற முறையான வசதி, தூக்கி கொண்டு வருவது போன்ற முறைகளைப் பின்பற்றாமல், மாடியில் இருந்து தூக்கி வீசுகின்றனா். பல நேரம் வாகனங்களை நிறுத்தி அதன் மீதும் சில நேரம் வாகனங்களை நிறுத்தாமல் தெருவிலும் வீசுவதால் பொதுமக்களும், குழந்தைகளும் அச்சம் அடைந்துள்ளனா்.
பெரிய பேல்கள் தூக்கி வீசப்படுவதால் மிகப்பெரிய சப்தம் கேட்கிறது.
பேல்களில் இருந்தும் மில்லில் இருந்தும் தூசி பறப்பதால், சுவாச பிரச்னை ஏற்படுகிறது. இது குறித்து பல மாதங்களுக்கு முன்பே மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதுவரை நடவடிக்கை இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கையெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

