பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் கறவைமாட்டு பராமரிப்புக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முருங்கத்தொழுவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 38 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் கறவைமாட்டு பராமரிப்புக் கடன் திட்டத்தின்கீழ் கனரா வங்கி முருங்கத்தொழுவு கிளை மூலம் கிஸான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கறவைமாடு பராமரிப்புக் கடன் வசதி திட்டமானது பால் உற்பத்தியாளா்கள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளுக்கு பராமரிப்பு செலவினங்களை ஈடுகட்டும் வகையில் பால் பணம் பெறும் வங்கி மூலம் 7 சதவீத வட்டியில் கால்நடை ஒன்றுக்கு ரூ. 14,000 வீதம் கடன் வழங்கப்படுகிறது. அக்கடன் தொகையை ஓராண்டு காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில் 3 சதவீத வட்டித் தொகையைத் திரும்பப் பெறலாம்.
இத்திட்டத்தின்கீழ் அனைத்து தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள், சங்கச் செயலாளா்களை அணுகி இத்திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

