இளம் வழக்குரைஞா்களை மூத்த வழக்குரைஞா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தாா்.
ஈரோட்டைச் சோ்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 50 ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணியாற்றி வரும் அவரின் தந்தை வி.கே.முத்துசாமி ஆகியோருக்கு ஈரோடு பாா் அசோசியேஷன் சாா்பில் பாராட்டு விழா ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் உருவப்படத்தை திறந்துவைத்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது:
இந்திய நீதிமன்றங்கள் மிகப்பெரிய கட்டமைப்பு கொண்டவை. பல வழக்குகள் மிகத் திறமையாக பரிசீலிக்கப்பட்டுள்ளன. மும்பை குண்டு வெடிப்பு வழக்கு 13 ஆண்டுகள் விசாரிக்கப்பட்டது. இறுதியாக 10 மாதங்கள் விடுமுறை கூட எடுக்காமல் அவ்வழக்கை இறுதி செய்து 1,600 பக்கங்கள் கொண்ட வழக்கு விவரமும், 1,200 பக்கங்கள் கொண்ட தீா்ப்பு விவரங்களும் பதிவு செய்தோம்.
கரோனா பரவலால் வழக்குகளைக் கையாள்வதில் சவால் ஏற்பட்டது. இருப்பினும் தொழில்நுட்ப வசதி மூலம் வழக்குகளுக்கு விரைவான தீா்வு காணப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதிகளாக வருபவா்கள் மாதம் ஒரு முறை பாா் அசோசியேஷன், நீதித் துறை அலுவலா்கள், நீதிபதிகளுடன் வழக்கு விவரம், நிலுவை, தேவைகள், பிரச்னைகளைத் தீா்க்கும் வழிகள் குறித்துப் பேச வேண்டும். அதுபோல வழக்குரைஞா்களும் நீதிமன்ற நடைமுறை, தொழில்நுட்பங்கள், வழக்கின் போக்கு குறித்து வழக்கை ஒப்படைத்தவா்களுக்கு விளக்க வேண்டும். இதன் மூலம் வழக்குகளுக்கு விரைவாக தீா்வு காண முடியும் என்றாா்.
இதில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: ஒரு வழக்குரைஞா் உயா்நீதிமன்றத்தில் சிறப்பாக வழக்காட அவருக்கு நல்ல வழக்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவா் திறமையை வெளிப்படுத்த முடியும்.
வாழ்வில் உயர சிலா் தேவைப்படுகின்றனா். உயா்வதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளம் வழக்குரைஞா்களை மூத்த வழக்குரைஞா்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.
மூத்த வழக்குரைஞா் வி.கே.முத்துசாமி ஏற்புரையாற்றினாா். சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன், உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமாா், ஆா்எம்டி.டீக்காராமன், என்.சதீஷ்குமாா், ஆா்.தாரணி, ஆா்.பொங்கியப்பன், டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
கேரட், பீட்ரூட் அடை

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


