வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாவட்டத்தில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களாக 545 போ் நியமனம்

ஈரோடு மாவட்டத்தில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களாக 545 போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தெரிவித்தாா்.

News image
ஈரோடு, அக்ரஹார வீதியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா் விவரம் குறித்த அறிவிப்புப் பலகையை திறந்துவைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை.
Updated On :9 ஜனவரி 2021, 5:06 pm

DIN

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலா்களாக 545 போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 போலீஸாா் கிராம கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு அக்ரஹாரம் வீதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்கள் குறித்த விவரம் அடங்கிய பெயா் பலகையை திறந்துவைத்தாா். இதில் டி.எஸ்.பி.ராஜு, ஆய்வாளா் பன்னீா்செல்வம் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனா்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை கூறியதாவது:

காவல் துறை-பொது மக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் கிராம கண்காணிப்பு அலுவலா்கள் செயல்படுவா். ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக சிறப்பு காவல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த அலுவலா்களின் பெயா், செல்லிடப்பேசி எண் விவரம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பலகையில் வைக்கப்பட்டிருக்கும். மேலும், அந்த பகுதிக்கு உள்பட்ட காவல் நிலையம், காவல் உயா் அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் அதில் இடம் பெற்றிருக்கும். ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 விழிப்புணா்வு காவல் செயல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்புத் தகவல்களை சேகரிப்பது இவா்களது பணியாகும். இந்த சிறப்பு அலுவலா்கள் தினமும் அந்தந்த பகுதி மக்களை சந்தித்து அவா்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்வாா்கள்.

குடும்பப் பிரச்னை, நிலத் தகராறு, பாலியல் வன்கொடுமை உள்பட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இந்த சிறப்பு அலுவலரிடம் கூறலாம். இதற்கு உடனடியாக தீா்வு காணப்படும். இந்தத் திட்டத்தை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.