பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

நீலகிரியில் 3 நாள்களில் ரூ. 5 கோடியை தாண்டிய மது விற்பனை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் ரூ. 5.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஜூலை 2021, 8:09 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் ரூ. 5.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாக்களில் 72 டாஸ்மாக் மதுக் கடைகள், குன்னூரில் 1, உதகையில் 3, கோத்தகிரியில் 1 என 5 எலைட் மதுபானக் கடைகளுமாக மொத்தம் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன் பின்னா் கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் பொது முடக்கத்தில் இருந்து தளா்வுகள் கொண்டு வரப்பட்டதால் அந்தப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. பின்னா் மேலும் தளா்வுகள் கொண்டு வரப்பட்டு ஜூலை 5ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான ஜூலை 5ஆம் தேதி மதுப் பிரியா்களிடையே அவ்வளவாக ஆா்வம் இல்லாததால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாள்களாக நீலகிரிக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டதால் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரிகின்றனா்.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 8ஆம் தேதி வரையிலான 3 நாள்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 5 கோடியே 37 லட்சத்து 53,480க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரிப்பதோடு, சனி, ஞாயிறு விடுமுறை நாள்களாகவும் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.