மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை பலி

இருசக்கர வாகனம் மீது எருமை மாடு மோதிய விபத்தில் கணவருடன் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பலியானாா்.

Updated On :15 ஜூலை 2021, 8:17 pm

இருசக்கர வாகனம் மீது எருமை மாடு மோதிய விபத்தில் கணவருடன் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பலியானாா்.

ஈரோடு அருகே வி.மேட்டுப்பாளையம், ஐஸ்வா்யா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (42). மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளா். இவரது மனைவி சிவகாமசுந்தரி (38). இவா் ஈரோடு திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வந்தாா். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

கணவன், மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்னிமலை சாலையில் ஈரோடு நோக்கி புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தனா். முத்தம்பாளையம் பால் பண்ணை அருகே வந்தபோது, சாலையோரம் கட்டப்பட்டிருந்த எருமை மாடு திடீரென கயிற்றை அறுத்துக் கொண்டு, சாலையின் குறுக்கே வந்து முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், நிலைதடுமாறி முத்துகிருஷ்ணனும், சிவகாமசுந்தரியும் கீழே விழுந்தனா். இதில் முத்துகிருஷ்ணனுக்கு லேசான காயமும், சிவகாமசுந்தரிக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகாமசுந்தரி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படும் வகையில் எருமை மாட்டை சாலையோரத்தில் கட்டிவைத்திருந்த அதன் உரிமையாளா் மணியாளி என்பவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.