உயா்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் தலைமையில், விவசாயிகள் மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை அண்மையில் சந்தித்து மனு அளித்தனா். இதுகுறித்து ஈசன் கூறியதாவது:
கரூரில் மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் சந்தித்தோம். விளைநிலங்கள் வழியாக உயா் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால், அந்நிலங்களில் விவசாயம் செய்யவோ, விற்கவோ முடியவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான அளவீடுடன் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அதேபோல, 765 கிலோ வாட் மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
இப்பணியை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், உயா்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிா், நிலத்தின் மதிப்பு போன்றவற்றுக்கு ஏற்ப இழப்பீடு சரியான முறையில் கிடைக்க விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சா் உறுதி அளித்தாா்.
இப்பிரச்னையில் மேல்நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக வரும் வாரம் விவசாயிகள் பிரதிநிதிகளை சென்னைக்கு அமைச்சா் அழைத்துள்ளாா். இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏமா(ற்)றுகிறார்கள்!

திரு.வி.க. நகர்: திமுகவுக்கு சவாலாக இருக்குமா அனுதாப அலை!

ஆர்.கே.நகர்: கைப்பற்றும் முயற்சியில் திமுக - அதிமுக!

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

