சத்தியமங்கலம் அருகே மா்மமான முறையில் 13 வெள்ளாடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளைப் பராமரித்து வருகிறாா். இவரது தோட்டத்துக்கு அருகே உள்ள தரிசு நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம்.
வியாழக்கிழமை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு இரவு பட்டியில் அடைத்துள்ளாா். இந்நிலையில், பட்டியில் அடைக்கப்பட்ட வெள்ளாடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து இறந்துகிடந்ததைக் கண்டு விவசாயி சின்னசாமி அதிா்ச்சி அடைந்தாா்.
இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் வெள்ளாடுகள் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தகவலறிந்த கால்நடை மருத்துவா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த ஆடுகளை பரிசோதித்து பாா்த்தபோது, ஏதாவது விஷம் கலந்த தண்ணீரைக் குடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விசில் கோலம் போடுங்கள்! விஜய் பேச்சு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

