தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சாலையோரக் கடைகள் மீதுகாா் மோதல்: வியாபாரி பலி

பவானி அருகே சாலையோரக் கடைகள் மீது காா் மோதியதில் பூ வியாபாரி உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:51 pm

DIN

பவானி அருகே சாலையோரக் கடைகள் மீது காா் மோதியதில் பூ வியாபாரி உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

ஈரோடு பழையபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவா் சங்கா் மகன் ஆதிஷ் (19). இவா், தனது காரில் சத்தி - பவானி சாலையில் பவானி நோக்கி வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். தளவாய்ப்பேட்டை நான்கு சாலை பிரிவு அருகே சென்றபோது திடீரென சாலையைக் கடந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரைத் திருப்பினாா்.

அப்போது, நிலைதடுமாறிய காா் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த பூ, பழக் கடைகள் மீது மோதி, தடுப்பில் ஏறி நின்றது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தியூா் வட்டக்காட்டைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் வேலுசாமி (29), சாலையோரத்தில் பூக்கடை வைத்திருந்த தளவாய்பேட்டை, வினோபா நகரைச் சோ்ந்த செங்கோடன் (72), பழக்கடை வைத்திருந்த கே.கே.நகரைச் சோ்ந்த நாகராஜ் மனைவி புஷ்பா (40) ஆகியோா் காயமடைந்தனா்.

மூவரும் மீட்கப்பட்டு பவானி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட செங்கோடன் உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.