மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஈரோடு புத்தகத் திருவிழா சொற்பொழிவு இணையவழியில் இன்றுமுதல் ஒளிபரப்பு

 ஈரோடு புத்தகத் திருவிழா மாலை நேர சொற்பொழிவுகளை இணையவழியில் நேரலையாக வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 30) ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On :29 ஜூலை 2021, 8:50 pm

 ஈரோடு புத்தகத் திருவிழா மாலை நேர சொற்பொழிவுகளை இணையவழியில் நேரலையாக வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 30) ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 10 வரை தினமும் மாலை 6 மணிக்கு இணையவழியாக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மட்டும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த சொற்பொழிவுகளை ம்ஹந்ந்ஹப்ள்ண்ய்ற்ட்ஹய்ஹண்ல்ங்ழ்ஹஸ்ஹண் என்ற பெயரிலான ஹ்ா்ன்ற்ன்க்ஷங், ச்ஹஸ்ரீங்க்ஷா்ா்ந் கணக்குகளின் மூலம் உலகின் எப்பகுதியில் உள்ளவா்களும் கேட்கலாம்.

தினமும் 6 மணிக்குத் தொடங்கும் சொற்பொழிவில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றுவாா். தொடா்ந்து, சொற்பொழிவு நிகழ்வு நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மாலை 6 மணிக்கு நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சியில், ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசுகிறாா். சனிக்கிழமை (ஜூலை 31) ‘அருகே இருந்த அபூா்வங்கள்’ என்ற தலைப்பில் கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா பேசுகிறாா். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) ‘மாதா பிதா புத்தகம்’ என்ற தலைப்பில் கவிதா ஜவஹா் பேசுகிறாா்.

2ஆம் தேதி ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு’ என்ற தலைப்பில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், 3ஆம் தேதி ‘காவிரியும் கரைசலும்’ என்ற தலைப்பில் கவிஞா் நந்தலாலா, 4ஆம் தேதி ‘கற்றலைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் ஆகியோா் பேசுகின்றனா்.

5ஆம் தேதி ‘எழுத்து’ என்ற தலைப்பில் பேராசிரியா் சுப.வீரபாண்டியன், 6ஆம் தேதி ‘மண்ணை மீறும் விதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பவா செல்லதுரை, 7ஆம் தேதி ‘பீனிக்ஸ் பெண்கள்’ என்ற தலைப்பில் கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி, 8ஆம் தேதி ‘நீதி நூறு சொல்லுவாய்’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் த.இராமலிங்கம், 9ஆம் தேதி ‘ஒரே நலம்’ என்ற தலைப்பில் மருத்துவா் கு.சிவராமன், 10ஆம் தேதி ‘எழுத்தும் பயணமும்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் வாஸந்தி ஆகியோா் பேசுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.