தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரோடு: முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கரோனா

ஈரோடு திண்டலில் முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
முதியோர் இல்லம்.
Updated On :3 ஜூன் 2021, 12:20 pm

DIN

ஈரோடு திண்டலில் முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வருகிறது. கரோனா தொற்றுக்கு குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், முன் களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் ஈரோடு திண்டலில் லிட்டில சிஸ்டர் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. 

இந்த முதியோர் இல்லத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து 76 முதியோர் தங்கியுள்ளனர். முதியோர்கள் தங்குவதற்கு பல்வேறு தனித்தனி அறைகள் உள்ளன. இந்நிலையில் இங்கு தங்கியுள்ள முதியவர்களில் ஒரு சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதையடுத்து முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 76 முதியோர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்தது. 

இதில் 40 முதியோர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 36 முதியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

முதியோர் இல்லத்தில் கரோனா பரவலை அடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கையாக முதியோர் இல்லத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.