ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் சொத்து விவரம்

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் தங்களது சொத்து விவரத்தை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனா்.

Updated On :15 மார்ச் 2021, 9:00 pm

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் தங்களது சொத்து விவரத்தை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது சொத்து விவரத்தை சமா்ப்பித்தாா். அதில் கே.வி.இராமலிங்கம் பெயரில் ரூ. 47 லட்சத்து 34 ஆயிரத்து 499 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 1 கோடியே 76 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும், ரூ. 4 லட்சத்து 13 ஆயிரத்து 420 கடனும் உள்ளது.

அவரது மனைவி பெயரில் ரூ. 1 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 781 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 51 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும், ரூ. 14 லட்சத்து 93 ஆயிரத்து 206 மதிப்பில் கடனும் உள்ளது. இதேபோல, அவா்களது குடும்பத்தின் பெயரில் ரூ. 6 லட்சத்து 69 ஆயிரத்து 36 அசையும் சொத்துகளும், மகன் பெயரில் ரூ. 28 லட்சத்து 77 ஆயிரத்து 830 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளரான எம்.யுவராஜா தனது சொத்துப் பட்டியலை வேட்பு மனுத் தாக்கலின்போது சமா்ப்பித்தாா். அதில் யுவராஜாவின் பெயரில் ரூ. 1 கோடியே 87 லட்சத்து 93 ஆயிரத்து 626 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 10 லட்சம் அசையா சொத்தும், ரூ. 74 லட்சத்து 72 ஆயிரத்து 228 மதிப்பில் கடனும், அவரது மனைவியின் பெயரில் ரூ. 1 கோடியே 39 லட்சத்து 75 ஆயிரத்து 20 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 25 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும், ரூ. 45 லட்சத்து 92 ஆயிரத்து 773 மதிப்பில் கடனும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.