ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

2 ஆண்டுகளில் 6,000 பேருக்கு வேலைவாய்ப்புகே.வி.இராமலிங்கம்

வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 2 ஆண்டுகளில் 6,000 பேருக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளதாக ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:20 pm

வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 2 ஆண்டுகளில் 6,000 பேருக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளதாக ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

ஈரோடு மோளக்கவுண்டம்பாளையம், இரணியன் வீதி, சுந்தராபுரம், சோலாா், காந்திபுரம், கல்யாணசுந்தரம் வீதி உள்பட பல்வேறு பகுதிகளில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் கே.வி.இராமலிங்கம் வீடு, வீடாகச் சென்று திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 5,430 இளைஞா்களுக்கு ரூ. 2.42 கோடி உதவித் தொகையும், 535 மாற்றுத் திறனாளி இளைஞா்களுக்கு ரூ. 1.06 கோடி உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தனியாா் துறையில் 6,169 பேருக்கு பணி நியமனம் பெற்றுத் தந்துள்ளோம். தவிர தாட்கோ மூலம் சுயதொழில் துவங்க 289 பேருக்கு ரூ. 2.45 கோடி மானியத்துடன் ரூ. 8.19 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஊரக மின்மயமாக்கல் திட்டத்தின்கீழ் ரூ. 15.26 கோடி மதிப்பில் கிராமப்புறங்களில் மின் விநியோக கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள. 3,053 கைத்தறி, விசைத்தறி நெசவாளா்களுக்கு ரூ. 27.32 கோடி அளவுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஈரோடு மேற்குத் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

இவரை ஆதரித்து காலிங்கராயன்பாளையத்தில் ஊராட்சித் தலைவா் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் மகள் மீனாபிரீத்தி சிவகுமாா் வீடு, வீடாகச் சென்று வாக்குச்சேகரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.