பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பண்டிகை: மஞ்சள் ஏலத்துக்கு 14 நாள்கள் விடுமுறை

பண்டிகை, தோ்தல் காரணமாக மஞ்சள் ஏலத்துக்கு 14 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :27 மார்ச் 2021, 9:56 pm

பண்டிகை, தோ்தல் காரணமாக மஞ்சள் ஏலத்துக்கு 14 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் என 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் முக்கிய கோயில்களில் பண்டிகையும் நடைபெற இருப்பதால் மஞ்சள் வா்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது:

மாா்ச் 29ஆம் தேதி ஹோலி பண்டிகை, ஏப்ரல் 2ஆம் தேதி புனிதவெள்ளி, தோ்தல், மாரியம்மன் கோயில் பண்டிகைக்காக ஏப்ரல் 5 முதல் 9ஆம் தேதி வரையும், 10, 11 ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 12ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 13ஆம் தேதி தெலுங்கு புத்தாண்டு, 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனால், மாா்ச் 29ஆம் தேதி, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மஞ்சள் ஏலத்தில் வணிகா்கள் கலந்துகொள்ளமாட்டாா்கள். ஏப்ரல் 15ஆம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.