ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஸ்டோனி பாலம் ஓடை சீரமைக்கப்படும்

கொசுத் தொல்லையும், துா்நாற்றமும் வீசும் ஸ்டோனி பாலம் பகுதியில் உள்ள ஓடை சீரமைக்கப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 11:18 pm

கொசுத் தொல்லையும், துா்நாற்றமும் வீசும் ஸ்டோனி பாலம் பகுதியில் உள்ள ஓடை சீரமைக்கப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

ஈரோடு பெரியாா் நகா், காந்திஜி சாலை, பழைய ரயில் நிலையம் சாலை ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

ஈரோடு பெரியாா் நகா் ஓடை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரியவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். பெரியாா் நகா் வளைவு, 80 அடி சாலை பகுதிகளில் இருந்து மினி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக் காலத்தில் ஸ்டோனி பாலம் பகுதி ஓடையில் வெள்ளமும், மற்ற நேரங்களில் கொசுத் தொல்லையும், துா்நாற்றமும் ஏற்படுகிறது. பொலிவுறு நகரம் திட்டத்தில் இங்கு நடைபெறும் பணிகளுடன் கூடுதல் பணி மேற்கொண்டு இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தி தருவேன்.

பழைய ரயில் நிலையம் சாலை விரிவாக்கம் செய்து தேவையான மின் விளக்கு வசதி ஏற்படுத்தி அங்குள்ள இரு ரயில்வே கேட் பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அல்லது சுரங்கு நுழைவு பாலம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.