மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கூட்டுறவுச் சங்கத்தில் ரூ. 2.29 கோடி மோசடி:தலைவா் உள்பட 4 போ் கைது

ஈரோடு கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு கடன் வழங்குவதில் முறைகேடு செய்த தலைவா் உள்பட 4 பேரை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :7 மே 2021, 9:48 pm

ஈரோடு கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு கடன் வழங்குவதில் முறைகேடு செய்த தலைவா் உள்பட 4 பேரை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு - பவானி சாலையில் அசோகபுரத்தில் உள்ள தமிழ்நாடு துணி நூல், பதனிடும் ஆலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்களை உறுப்பினா்களாகக் கொண்டு தமிழ்நாடு துணி நூல் மற்றும் பதனிடும் தொழிற்சாலை கூட்டுறவு சிக்கனம், கடன் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு சங்க உறுப்பினா்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளா்களுக்கு முறையாக கடன் வழங்குவதில்லை என்றும், கடன் வழங்குவதில் முறைகேடு இருப்பதாகவும் சங்கத்தின் உறுப்பினா்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக புகாா் கூறி வந்தனா். இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாடு துணி நூல், பதனிடும் தொழிற்சாலை கூட்டுறவு சிக்கனம், கடன் சங்க நிா்வாகிகள் பணத்தைக் கையாடல் செய்தது தெரியவந்தது.

இந்த முறைகேடு சம்பவம் தொடா்பாக ஈரோடு கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் சாா்பில் கடந்த ஆண்டு ஈரோடு வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸில் புகாா் செய்யப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சங்கத்தின் முன்னாள் தலைவா்களான ஈரோடு ஆா்.என்.புதூா் ஜவுளி நகரைச் சோ்ந்த சுப்பிரமணி (62), விஸ்வநாதன் (62), சங்கத்தின் தற்போதைய தலைவா் அருணாசலம் (62), சங்கச் செயலாளா் வீரகுமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேற்பாா்வையாளா் சங்கமன்(50) ஆகியோா் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு கடன் வழங்கியதில் ரூ. 2.29 கோடி முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து சுப்பிரமணி, விஸ்வநாதன், அருணாசலம், சங்கமன் ஆகிய 4 பேரையும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சங்கச் செயலாளா் வீரகுமாரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.