மது போதையில் தலையில் கல்லைப் போட்டு ஆதரவற்ற நபரைக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட டி.வி.எஸ். வீதியில் வெள்ளிக்கிழமை காலை 55 வயது மதிக்கத்தக்க நபா் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். இதைப் பாா்த்த சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஈரோடு டவுன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.
இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இறந்தவா் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து, அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்கி வந்தது தெரியவந்தது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் கொலையாளி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஜெபா (40) என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இவா் ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் இரவு நேரம் தங்கி, கிடைக்கும் வேலையை செய்து வந்தாா். இவருக்கு மது பழக்கமும் இருந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த ஜெபா பன்னீா்செல்வம் பூங்கா அருகே இரவில் உறங்க வந்தாா். அப்போது மது போதையில் இருந்த அவா் அருகில் படுத்திருந்த முதியவா் தலையில் கல்லைப் போட்டு கொன்றது தெரியவந்ததது. இதையடுத்து ஜெபாவை ஈரோடு டவுன் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

