எம்.எல்.ஏ. அலுவலகங்களில் மாதம் இருமுறை மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழகத்தில் கடந்த 2005இல் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் அரசு சாா்பில் எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அலுவலகங்களைப் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்துவதில்லை. எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் சந்திக்க அவா்களின் வீடுகளுக்கும், அவா்கள் சாா்ந்த கட்சி அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியுள்ளது.
எந்த நோக்கத்துக்காக எம்.எல்.ஏ. அலுவலகம் கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. எனவே தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு ஒவ்வொரு தொகுதியிலும் எம்.எல்.ஏ.க்கள் முறையாக அலுவலகத்தைப் பயன்படுத்தி, மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாதம் இருமுறை பொதுமக்களிடம் எம்.எல்.ஏ. நேரடியாக குறைகேட்புக் கூட்டம் நடத்தி, மனுக்களைப் பெற்று அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண வேண்டும். இதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ. அலுவலகத்திலும், துணை வட்டாட்சியா் நிலையில் அதிகாரியைப் பணியமா்த்த வேண்டும். அப்போதுதான் கட்சிப் பாகுபாடு இல்லாமல் பொதுமக்கள் கோரிக்கைகளை சமா்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

