தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரோடு: 132 வாகனங்களில் காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

News image
ஈரோட்டில் வாகனங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனை.
Updated On :24 மே 2021, 5:06 am

DIN

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

மாநகர் பகுதியில் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. 
இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக வண்டிகளில் காய்கறி மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை கடைகளுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் இதற்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் வண்டிகள் மூலம் மக்கள் குடியிருப்புக்கு சென்று காய்கறிகள் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த இரண்டு நாட்களாக வாகனங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 132 வாகனங்கள் மூலம் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் இந்த வாகனங்கள் சென்று காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த வாகனங்களுக்குத் தேவையான பாஸ் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.

Story image

இன்று காலை வெளி மாவட்டங்களில் இருந்து வந்த காய்கறி லோடுகள் நேரடியாக ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்தது. அங்கிருந்து வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் பிரித்து எடுக்கப்பட்டு குடியிருப்பு பகுதியில் நேரடியாகச் சென்று விற்பனை செய்யப்பட்டது. காலை 6 மணி முதல் 12 மணி வரை வாகனம் மூலம் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மார்க்கெட்டில் விற்கப்படும் விலையிலேயே காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன. கூடுதல் விலைக்கு விற்கப்படவில்லை. வாகனங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்க வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இதுபோல் விற்பனையில் ஈடுபடுவோரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.