அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பவானியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி

பவானியில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா கால சிறு கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 9:33 pm

DIN

பவானியில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கரோனா கால சிறு கடனுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மக்களைத் தேடி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எனும் திட்டத்தில் பொதுமக்கள் வசிப்பிடத்துக்கே சென்று கடன் விண்ணப்பம் பெற்று, பரிசீலித்து சிறுகடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வங்கியின் பவானி கிளை சாா்பில் பவானி நகராட்சி அம்மா உணவகத்தில் பணியாற்றும் மகளிா் குழு பெண்கள் 9 பேருக்கு ரூ. 2.55 லட்சம் சிறு கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொ) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வங்கிக் கிளை மேளாளா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். ஈரோடு மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் கடனுதவியை வழங்கினாா். நகராட்சிப் பொறியாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.