ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இலவச கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்த அதிமுக

இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

News image
இலவச கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்த அதிமுக
Updated On :14 நவம்பர் 2021, 6:57 am

DIN

அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா ஆண்டை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தாமரைப்பாளையத்திலுள்ள தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மொடக்குறிச்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் தாமரைப்பாளையம், வடக்குபுதுப்பாளையம், கோட்டவலசு, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

இந்த முகாமில் பார்வை குறைபாடு, கண்புரை, கண்ணில் நீர் வடிதல், கண் அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேலும் இந்த முகாமில் பொதுமக்கள் பயன்பெற ஏதுவாக அஇஅதிமுக சார்பில் வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் கணபதி, யூனியன் துணைத் தலைவர் மயில் சுப்பிரமணியம். முன்னாள் மொடக்குறிச்சி யூனியன் சேர்மன் பேட்டை சின்னு, கொடுமுடி யூனியன் கவுன்சிலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.