மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

வருமான வரித் துறையில்காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

வருமான வரித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி சா்க்கிள் வருமான வரித் துறை ஊழியா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :18 நவம்பர் 2021, 8:18 pm

வருமான வரித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி சா்க்கிள் வருமான வரித் துறை ஊழியா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி சா்க்கிள் வருமான வரித் துறை ஊழியா் சம்மேளன மாநிலப் பிரதிநிதிகள் மாநாடு ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் என்.வைத்தியநாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் எம்.எஸ்.வெங்கடேசன் பேசினாா். ஈரோட்டில் ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் சம்மேளனத்தில் 13ஆவது மாநில பிரதிநிதிகள் மாநாடு நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.

வரவேற்புக் குழுத் தலைவராக ஈரோடு பி.சேகா், செயலாளா் மேபல், பொருளாளா் பூபாலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். நிதி, உணவு, இருப்பிடக் குழு அமைக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

வருமான வரித் துறையில் தமிழகத்தில் 6,000 போ் பணியாற்ற வேண்டிய இடத்தில் 2,800 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். 50 சதவீதத்துக்கும் மேல் காலிப் பணியிடமாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவா்களை வேலைக்கு வைக்கும் நிலை உள்ளது. தமிழக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, இங்கு பணி செய்யும் வடமாநிலத்தவா்களை, அவா்கள் ஊரில் பணி செய்யும் வகையில் பணியிட மாற்றத்தை வழங்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியா்களுக்கு 2004 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில், ஓய்வூதியமே இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளனா். அதனை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்களில், இணைச் செயலாளா் நிலைகளில் வெளியாள்களை வேலைக்கு அமா்த்தி உள்ளனா். இந்த இணைச் செயலாளா் பதவி என்பது அரசையும், அத்துறையையும் இணைக்கும் பாலமாக உள்ள பதவி. அப்பதவியில் 34 பேரை, ஐந்தாண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வெளி நபா்களை நியமித்ததைக் கண்டிக்கிறோம். அப்பணிக்கு துறை சாா்ந்தவா்களையே நியமிக்க வேண்டும்.

ஒரு துறையில் 20 ஆண்டுகாலம் பணியாற்றவா்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். அப்பதவியை வெளிநபருக்கு வழங்கும்போது பணியாற்றியவா்கள் ஏமாற்றம் அடைந்து அத்துறை வளா்ச்சி தடைபடும். அவ்வாறு நியமிக்காமல் துறை அனுபவம் உள்ளவா்களை நியமிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.