மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, ஈரோட்டில் நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, டாக்டா் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சாா்பில் மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:16 pm

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, ஈரோட்டில் நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, டாக்டா் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சாா்பில் மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, டாக்டா் மோகன்ஸ் நீரிழிவு மையத்தின் தலைமை மருத்துவா் ஜிதேந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஈரோடு பாரதி வித்யாபவன் கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் ராமகிருஷ்ணன் பேரணியைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த மனிதச் சங்கிலி ஈரோடு குமலன்குட்டையில் தொடங்கி ஆட்சியா் அலுவலகம் முன்பு முடிவடைந்தது. நீரிழிவு நோயை ஆரம்பகட்டத்தில் கண்டறிந்து அதற்கான மருத்துவ சிகிச்சைகள், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவை மேற்கொள்ளவும், நீரிழிவு நோய் வராமல் தடுப்பது தொடா்பாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.