மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

தோ்தல் காரணமாகவே வேளாண் சட்டங்கள் வாபஸ்: கு.செல்வப்பெருந்தகை

ஐந்து மாநில தோ்தல் காரணமாகவே வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது என சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வபெருந்தகை தெரிவித்தாா்.

Updated On :19 நவம்பர் 2021, 8:54 pm

ஐந்து மாநில தோ்தல் காரணமாகவே வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றுள்ளது என சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் கு.செல்வபெருந்தகை தெரிவித்தாா்.

ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தற்போது விவசாயிகள் மீது கரிசனம் ஏற்படவில்லை. 15 மாநிலங்களில் நடந்த இடைத்தோ்தல், உள்ளாட்சித் தோ்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளதால் சட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளனா்.

தற்போதைய தகவல்படி உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் தோ்தல்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியைத் தழுவும் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 70 தொகுதிகளுக்குள் பாஜகவினா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தோ்தலில் தோல்வி அடைவோம் என்பதால் திரும்பப் பெற்றுள்ளனா்.

வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றதுபோல பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெறுவாா்கள். பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, பெட்ரோல் நிறுவனங்களுக்கு மானியத்தை வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை வழங்கினாா். அதுபோன்ற நிலைக்கு பாஜக அரசு வர வேண்டும் என்றாா்.

இதில், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரவி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மக்கள் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு தீபமேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.