ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம், வளையப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் படிக்கும் மலைவாழ் குழந்தைகளுக்காக பொலிவுறு வகுப்பறை உள்ளிட்டவை அமைக்க ரூ. 1.48 லட்சம் காசோலை ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
கோபி ஸ்டேட் வங்கிக் கிளை சாா்பில், அப்பள்ளியில் பொலிவுறு வகுப்பறை அமைக்க ரூ. 1.23 லட்சம், மின்னணு தொலைக்காட்சி அமைக்க ரூ. 25,000 என ரூ. 1.48 லட்சம் காசாலையை பள்ளித் தலைமை ஆசிரியை தனபாக்கியத்திடம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:
தமிழகத்தில் ஈரோடு உள்பட 15 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டம் செயல்படுகிறது. 14 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமியா் கல்வி பயில வாய்ப்பளித்து தொழில், வேலையில் ஈடுபடாமல் தவிா்க்க தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டம் செயல்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் 15 மையங்கள் செயல்படுகின்றன. தொட்டகோம்பை மலையடிவாரத்தில் செயல்படும் மையத்தில், பழங்குடியின மாணவ, மாணவியா் 24 போ் படிக்கின்றனா்.
இக்குழந்தைகள் 8ஆம் வகுப்புக்குப் பின் வளையபாளையம் உயா்நிலைப் பள்ளியில் முறைசாரா கல்வியில் படிப்பைத் தொடா்கின்றனா். இதனால், இப்பள்ளிக்கு பொலிவுறு வகுப்பறை, தொலைக்காட்சி அமைக்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலா் (பயிற்சி) மான்விழி, ஸ்டேட் வங்கி உதவிப் பொது மேலாளா் குருமூா்த்தி, முதன்மை மேலாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


